30 ஆயிரம் வளையல்களுடன் அம்மனுக்கு அலங்காரம்

30 ஆயிரம் வளையல்களுடன் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
30 ஆயிரம் வளையல்களுடன் அம்மனுக்கு அலங்காரம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த கிருஷ்ண கொண்டம்மாள் கோவில் உள்ளது.

இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இன்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கிருஷ்ண கொண்டம்மாள் கோவிலில் கிருஷ்ணர் மற்றும் கொண்டம்மாள் சுவாமிகளுக்கு 30ஆயிரம் வளையல்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடந்தது.

இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிகயிறு மற்றும் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com