பள்ளியில் புகுந்து பொருட்கள் சூறை

மதுரையில் பள்ளிக்கூடத்தில் புகுந்து பொருட்கள் சூறையாடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு
Published on

மதுரை

மதுரை கரிமேடு முனியாண்டி கோவில் தெருவில் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு நேற்று இரவு மர்மகும்பல் வந்தது. அப்போது பள்ளியில் வாட்ச்மேன் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த கும்பல் பள்ளிக் கூடத்துக்குள் புகுந்தது. 

அங்குள்ள வகுப் பறையில் இருந்த ஆம்ப்ளி பயர், புரொஜக்டர், சி.பி.யூ., லேப்டாப், மோடம் உள்பட ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.  பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.  

இதுகுறித்து தலைமை ஆசிரியை சித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பள்ளிக்கூடத்துக்கு வந்தார். பள்ளிக்கூட வகுப் பறையில் இருந்த ரூ 25 ஆயிரம் மதிப்புடைய உபகரணங்கள் சூறையாடப்பட்டு கிடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் இதுகுறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம கும்பல் குடி போதையில் பள்ளிக்கூடத்தில் புகுந்து பொருட்களை  சூறையாடியதா? அல்லது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதன் காரண மாக பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டதா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com