கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி

கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது. முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com