சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழாவை மணிமாறன் தொடங்கி வைத்தார்.திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.
திருமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
திருமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமை தாங்கினார். மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண் களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவு வளையல் பழ வகைகள் நெய் உடை மற்றும் சில்வர் தட்டு ஆகியவற்றை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 2000 மூன்றாம் மாதம் முடிவில் 2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பகால சேவைக்காக 2000 வழங்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருமங்கலத்தில் செக்கானூரணி, சாத்தங்குடி, புதுப்பட்டி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராம லிங்கம், நகராட்சி துணை சேர்மன் லதா அதியமான், ஆதவன் அதியமான், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன் தங்கப்பாண்டி, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com