இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்படுவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வக்கீல் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.

மேலூர் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றிற்காக பொதுமக்களை அலைகழிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர், தாலுகா குழு உறுப்பினர் பெரியவர், மாவட்ட குழு உறுப்பினர் திலகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com