கல்லூரி மாணவி-பிளஸ் 1 மாணவர் மாயம்

கல்லூரி மாணவி-பிளஸ் 1 மாணவர் மாயமானார்கள். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி-பிளஸ் 1 மாணவர் மாயம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே நடுக்கோட்டையை சேர்ந்தவர் பாக்கியபாண்டி. இவரது மகள் சரஸ்வதி (வயது19). இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி பாக்கியபாண்டி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

மாணவர் மாயம்

திருமங்கலத்தையடுத்த ராயபாளைத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவுதமன் (17). பிளஸ்-1 மாணவர். இவர் கடந்த 29-ந் தேதி பள்ளிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை. இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரிந்து விட்டது என்று கருதிய கவுதமன் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com