கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.
கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்ன கத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.

இறை வார்த்தை சபை மாநில தலைவர் சாந்து ராஜா தலைமை தாங்கினார். திருத்தல பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை எழுந்தருள செய்து தூபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்மஸ் பாடல்கள், பங்கு இளை யோர் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவ கங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com