கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு

மதுரை அருகே கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.
பாலமுருகன்
பாலமுருகன்
Published on

மதுரை

மதுரை முத்துப்பட்டி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முருகன் மகள் கமலவேணி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென கமலவேணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து ஓடினார். உடனே மாணவி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டு குற்றவாளியை பிடித்து திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி னார். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், மானா மதுரை, அன்பு நகரைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்பு க்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com