கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலி

திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலியானார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலி
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தை சேர்ந்தவர் காசி (வயது54). கப்பலூர் தொழிற்பேட்டையில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கூத்தியார்குண்டு கண்மாயில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அந்த பகுதியில் நின்றவர்கள் கண்மாய்க்குள் இறங்கி காசியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

ஆகவே கண்மாயில் காசி மூழ்கியது குறித்து திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வெகுநேர தேடுதலுக்கு பிறகு காசி பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com