பஸ்கள் மோதி 7 பேர் காயம்

திருமங்கலம் ரிங் ரோட்டில் பஸ்கள் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ்கள்.
விபத்தில் சிக்கிய பஸ்கள்.
Published on

திருமங்கலம்

கன்னியாகுமரியில் இருந்து மாட்டுத்தாவணிக்கு  அரசு பஸ் சென்று கொண் டிருந்தது. அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வபூபதி (50) 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஓட்டிவந்து கொண்டிருந்தார்.

திருமங்கலம் ரிங்ரோடு சொக்கநாதன்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு  சென்ற அரசுபஸ்சை முந்த முயன்றார். 

எதிர்பாராத விதமாக கன்னியாகுமரி பஸ், திருமங்கலம் பஸ் மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் வந்த மதுரை அரசு மருத்துவமனை பணியாளர் திருமங்கலத்தைச் சேர்ந்த நல்லழகு (57), தமிழ்செல்வி (47), ஆலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (62), விடத்த குளத்தைச்சேர்ந்த அன்னக் கொடி(45), அலங்காநல்லூர் முத்துசெல்வகுமார்(32), மகாராணி (43), நிவேதா(22) ஆகிய 7பேர் காயமடைந்தனர். 

அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருமங்கலம் நகர் போலீசார் இந்தவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com