திருமங்கலத்தில் சாலையில் திடீர் பள்ளம்

திருமங்கலத்தில் சாலையில் திடீர் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையில் பள்ளம்
சாலையில் பள்ளம்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம்  ரெயில் நிலையத்தின் முன்புறம் ரெயில்வேக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இது தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாகவும் திறந்தவெளி கழிப்பிடமாகவும்

 இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் ரெயில் நிலையத்திற்கு செல்கின்ற பயணிகள் முகத்தை மூடியபடி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின் விளக்குகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக  ரெயில் நிலைய சாலையின் நடுவே விரிசல்கள் தோன்றி திடீர் பள்ளங்கள் உருவாகி உள்ளன.

 இதனால் வாகனங்களில்  அந்த வழியே செல்வோரும், ரெயில் பயணத்திற்கு வருபவர்களும்   விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர்.  

எனவே பயணிகளின்  நலன் கருதி  ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com