செல்போனில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரங்களை அளிக்க வேண்டாம் - போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன்

செல்போனில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரங்களை அளிக்க வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
கண்டெடுக்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on

மதுரை

மதுரை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போன வழக்குகளில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 2 வாரங்களில் மட்டும் தொலைந்துபோன ரூ.4.67 லட்சம் மதிப்பு உடைய 30 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த செல்போ ன்களை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உரியவர்க ளிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படை க்கப்பட்டு உள்ளன.

அடுத்தபடியாக வங்கி களில் இருந்து பேசு வதாக கூறி, பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதன திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அது தொடர் பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக கடந்த 2 வாரங்களில் ரூ.1.69 லட்சம் மீட்கப்பட்டு, ஊழியர்களின் வங்கி கணக்குகளில் மீண்டும் செலுத்தப்பட்டு உள்ளன.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.26.64 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிகணக்கு எண், சி.வி.வி மற்றும் ஓ.டி.பி ஆகிய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.

இதேபோல பண இரட்டிப்பு வாக்குறுதி தரும் இன்வெஸ்ட் மெண்ட் ஆப்-களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் லோன் ஆப்களிடம் ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், ரிமோட் ஆக்சஸ் ஆப்-களான 'எனி டெஸ்க்', 'டீம் வியூவர்' போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

அப்படி யாரேனும் மேற்கண்ட வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 இலவச அழைப்பு எண் அல்லது www.cybercrime.gov.in இணையதள முகவரியில் தொடர்புகொண்டு 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com