அருணாசலேஸ்வர் கோவிலில் வருடாபிஷேக விழா

அருணாசலேஸ்வர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அருணாசலேஸ்வர் கோவிலில் வருடாபிஷேக விழா
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள பச்சைநாயகியம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடாகி சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் ஊற்றி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமிக்கும்-அம்பாளுக்கும் 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தனர்.

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அருணாசல ஈஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெகதீசன், செந்தில்குமார், ராஜேஷ் கண்ணா, கணக்கர் சிவகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com