என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்தார்.
  • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

  திருப்பரங்குன்றம்

  அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  தொடர்ந்து மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

  16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு பஸ் நிறுத்த பகுதியில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் குலோத்துங்கன், பொன்.ராஜேந்திரன், கார் சேரி கணேசன், வாசு, இளைஞரணி மாநில துணை செயலாளர் பாரி, ஒன்றிய குழு உறுப்பினர் மாயி,பகுதி செயலாளர் செந்தில், சரவணன்,முருகேசன், துணைச் செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நாகரத்தினம், பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலா, வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  அவனியாபுரம்

  அ.தி.மு.க.51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் ஜி.ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

  இதில் ஸ்ரீராம் ரங்கராஜ், ராஜாமணி, ரவி, காளிதாஸ், மார்க்கெட் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மாரியப்பன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, அருண்குமார், முனிபாலன், தனபாண்டி, ஜெயபாண்டி, சுந்தர், குமார், குபேந்திரன், முத்தையா, பிரபு, கண்ணன், அருண்பாண்டி, சாத்தன உடையார், பத்ரி முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

  Next Story
  ×