அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்

வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். கோட்டைமேடு பாலன் வரவேற்றார்.
அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, ராமகிருஷ்ணன்.பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டைமேடு பாலன் வரவேற்றார். இதில் குலசேகரன்கோட்டை பாண்டி, மற்றும் நிர்வாகிகள் அழகர், குழந்தைவேலு, ராமநாதன், நாகமணி, பிச்சை, மலைச்சாமி, வி.எஸ் பாண்டி பிரசன்னா, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி.உதயகுமார் ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com