அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com