

மதுரை
விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில், ரெயில்வேயில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது. மதுரை கோட்டத்தில் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த நெல்லை, பெருமாள்புரம் நீச்சல்வீரர் எமில் ராபின்சிங்குக்கு ரெயில் வேயில் வேலை வழங்கப்பட்டது.
தேசிய அளவில் 400 மீட்டர் மெட்லே நீச்சல் போட்டிகளில் எமில்ராபின்-சிங் தங்கம் வென்றதை பாராட்டும் வகையில், இவருக்கு நெல்லை மாவட்டம் குரும்பூர் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு அலுவலர் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த தேசிய ரெயில்வே நீச்சல் போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். இதனால் தென்னக ரெயில்வே தெற்கு ரெயில்வே தேசிய அளவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நீச்சல் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.
எமில் ராபின்சிங்கின் தந்தை தங்கதுரை, பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தவர்.