மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர்

மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.
மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர்
Published on

மதுரை

மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.

ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.

இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com