ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீர் சாவு

ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீரென பரிதாபமாக இறந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீர் சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தம்பிபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இவரது மகன் ராஜ்குமார்(வயது48), மாற்றுத்திறனாளி. விபத்தில் ஒரு காலை இழந்தவர். இவர் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டல் மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நேற்று இறந்து விட்டார். இதுபற்றி சுந்தரம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com