58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மறியல்

உசிலம்பட்டி அருகே 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஏர் கலப்பையுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.
ஏர் கலப்பையுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ் வாதாரமாக கருதப்படும் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் உசிலம் பட்டி பேருந்து நிலையம் அருகே அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங் கிணைப் பாளர் தியாகராஜன் தலை மையில் விவசாயிகளின் காவலனாக கருதப்படும் ஏர் பிடித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது தகவல் அறிந்து வந்த நகர் காவல் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com