கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை அருகே 4 பேர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

மதுரை

திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் லாரி செட் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் மணிவண்ணன். இவர் பாலாஜி நகரில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தொந்தரவு கொடுத்தாராம்.

இந்த நிலையில் பாலாஜி நகர், காமராஜர் தெரு, ஜெயச்சந்திரன் என்ற கோட்டை காளை (58), அவரது மகன் மாயபாண்டியன் (28), தேவி நகர் இளையசாமி (43) மற்றும் கார்த்திக், விக்கி, அலெக்ஸ் உள்பட 6 பேர் லாரி செட்டுக்கு வந்து கண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் பசுமலை, முனியாண்டிபுரம் மணிவண்ணன் வீட்டுக்கும் சென்று அங்கிருந்த மனைவி ஜெயலட்சுமியை (25) தாக்கினர். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயச்சந்திரன், இளையசாமி, மாய பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

இதே வழக்கில் ஜெயசந்திரன் மகள் ரதி லட்சுமி (32) கொடுத்த புகாரின்பேரில், மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com