ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது

பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது
Published on

மதுரை

மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com