

மதுரை
மதுரை மானகிரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தேன்மொழி (வயது 37). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்த தேன்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்மேனி சுரேந்திரன் நகரைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (79). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஆதிலட்சுமி விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி இறந்தார்.
சொக்கிக்குளம் அண்ணா நகரைச்சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கார்த்திக் (23). கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட இவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.