பால் வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை

பால் வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பால் வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருேக உள்ள கரிசல்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

பால் வியாபாரி தற்கொலை

கடந்த சில வாரங்களாக மகாலிங்கத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்ப ட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த மகாலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகாலிங்கம் பரிதாாமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் சீனிவாச பெருமாள் நகரைச் சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகன் பாலமுருகன் (வயது 17). இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் ஒரு பூட்டிய வீட்டில் வராண்டாவில் பாலமுருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com