லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
Published on

மதுரை

மதுரை அருகே உள்ள கருமாத்தூர் கேசவன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சம்பவத்தன்று கோச்சடை மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் லாரியில் இருந்த 2 பேட்டரிகளை திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் எஸ் .எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆரப்பாளையம் பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் மரியராஜ், பாலமுருகன் ஆகிய 2 பேர் பேட்டரி திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com