

மதுரை
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் (வயது75). நேதாஜிரோட்டைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 50).
இவர்கள் கடந்த 10ந்தேதி மதியம் ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு- ஜீவாநகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக 2பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் சுப்புராமுக்கு பின்னந்தலையில் ரத்தக் காயம், இடது நெற்றியில் காயம் ஏற்பட்டது. அசோகனுக்கு கை- கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து மேற்கண்ட 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சுப்புராமனும், அசோகனும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர்.
இதுதொடர்பாக திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சோலை அழகுபுரம் ஜவகர் தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் கார்த்திக் (19)என்பவரை கைது செய்தனர்.
இதற்கிடையே ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு- ஜீவா நகர் சந்திப்புபகுதியில் சரக்குவாகனம் மோதி சுப்புராம், அசோகன் ஆகிய 2பேரும் படுகாயம் அடைந்த சிசிடிவி கண் காணிப்பு காமிரா காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.