2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல்

மதுரையில் 2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல்
Published on

மதுரை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் என்ற வடிவேல் (வயது 61). இவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய பிரஜையாக உள்ளேன். மதுரை வளர் நகர் பகுதியில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.இங்கு எனது பெயரில் வாங்கிய இடத்தில் 2 வீடுகள் கட்டி வந்தேன்.

இதற்காக சிறுகூடல் பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவரை உதவியாளராக நியமித்து அவரது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரை வீடுகள் கட்டுவதற்காக அனுப்பியதுடன், அவருக்கும் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன்.

இந்த நிலையில் அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற நான் அந்த வீட்டுகளுக்குரிய சாவியை நாச்சியப்பனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். இங்கு வந்து பார்த்தபோது நாச்சியப்பனும், அவரது மனைவி அருள் சசிகலாவும் என்னுடைய அனுமதியில்லாமல் 2 வீடுகளையும் அபகரித்து க்கொண்டதுடன் அதில் அத்துமீறி நுழைந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கேட்ட போது ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் நாச்சியப்பன், அவரது மனைவி அருள் சசிகலா ஆகியோர் மீது மாட்டு தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com