10 பவுன் நகை பறிப்பு

மதுரையில் ரெயில்வே அதிகாரி மனைவியிடம் 10 பவுன் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

மதுரை

மதுரை சம்மட்டிபுரம், தில்லை நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தென்னக ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). நேற்று இரவு இவர் சம்மட்டிபுரம் அருகே நடந்து சென்றார். 

அப்போது அவரது அருகில் ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். மகேஸ்வரி தியேட்டர் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் மகேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். 

இதுகுறித்து மகேஸ்வரி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை துரைசாமி நகர்,ஷாலினி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 66). இவர் நேற்று இரவு துரைசாமி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முதியவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில்  எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.எஸ்.காலனியில் ஒரேநேரத்தில் 2 பேரிடம் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com