மேலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

மேலூர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் பலி
Published on

மேலூர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் செய்யதுஅலி. இவரது மகன் காதர்மீரான் (வயது30). இவர் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

இன்று காலை 8 மணி அளவில் மதுரை மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி  4 வழிச்சாலை சந்திப்பில்  வந்தபோது  எதிர்பாராவிதமாக சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த காதர்மீரான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com