

மதுரை
மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 200&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும் செலவுக் கும் ஆன வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், 2003-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு, ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது-.
இதில் சி.ஐ.டி.யூ. மண்டல தலைவர் அழகர்சாமி, உதவி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தெய்வராஜ், கனகசுந்தர், மாரியப்பன், மணிமாறன், செல்வராஜ், மகாதேவன், முரளிதரன், பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.