

மதுரை
விராட்டிபத்து டீக்கடை முன்பு பெண்ஒருவர் நடந்து செல்கிறார். அங்குவந்த வாலிபர் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி செல்கிறார். இது அந்தப்பகுதியில் பொருத்-தப்பட்டு உள்ள கண்-காணிப்பு காமிராவில் பதிவானது.
இதில் தொடர்-புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை, திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் மேற் பார்வையில், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அடங்கிய தனிப்படை அமைக்-கப்-பட்டது. இவர்கள் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் வாலிபர் தாக்கிய பெண், விராட்டிபத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அழகர் மனைவி தனம் (37) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசா-ரணை நடத்தினர்.
அவர் “நான் விராட்டிபத்தை சேர்ந்த காசி (54) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் வாங்-கினேன். அதனை திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் பணம் கேட்கிறார். நான் தரமறுத்தேன். அவர் என்னை நடுரோட்டில் தாக்கினார்” என்று தெரிவித்தவர், எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
போலீசார் காசியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காசி கூறுகையில், “தனம் அம்மாவுக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலகுறைவு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ரூ.20ஆயிரம் பணம் கேட்டார்.
எனவே நானும் கொடுத்தேன். ஆனால் அந்தப் பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. ‘அதோ தருகிறேன், இதைத் தருகிறேன்’ என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டே வந்தார்.
சம்பவத்தன்று தனம் விராட்டிபத்து மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் அவர் என்னை சரமாரியாக தாக்கினார். எனவே நானும் திரும்பி தாக்க நேரிட்டது என்று தெரிவித்துள்ளார். தனத்தை தாக்கிய எஸ்.எஸ்.காலனி போலீசார் காசியை கைதுசெய்தனர்.