

மதுரை
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, தெற்கு ெரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகில் ரூ.72 கோடி செலவில் தினந்தோறும் 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் பிரத்யேக காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நடப்பு நிதியாண்டில் இதுவரை 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாராகி பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மதுரை ெரயில்வே கோட்டம் ரூ.15.412 கோடி மின்சார செலவை மிச்சப்படுத்தி உள்ளது. கயத்தாறு காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.48.057 கோடி மின்சார செலவு சேமிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தபடியாக மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாராகி அலுவலக உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை ெரயில் நிலைய நடைமேடை மேற் கூரை களில் 100 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்ட் தகடுகள் அமைக்கப்பட்டு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100 சதவீதம் பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மதுரையிலும் இயற்கை மின்சாரம் தயாரிப்புக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.