மதுரை பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மதுரை ராஜாஜி பூங்கா நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியி ஈடுபட்ட போலீசார்
மதுரை ராஜாஜி பூங்கா நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியி ஈடுபட்ட போலீசார்
Published on

மதுரை

தமிழகம் முழுவதும் இன்று காதலர்தினம் கடைபிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் காதலர்கள் சுற்றித் திரிந்ததை பார்க்க முடிந்தது. பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் காதலர்கள் சந்திப்பு நடந்தது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொழுது போக்கு தளங்கள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட வில்லை. இதன்காரணமாக மதுரை மாவட்டத்தில் காதலர்தினம் கடந்த 2 ஆண்டுகளாக பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து உள்ளதால், தமிழக அரசு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு தலங்களை திறக்க உத்தரவிட்டு உள்ளது. 

இதன் காரணமாக இன்று உலக காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க்,  அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் காதலர்கள் திரிந்தனர். ஒருவருக்கொரு வர் பூங்கொத்து கொடுத்து  அன்பை பகிர்ந்து கொண்டனர்.

 மதுரையில் காதலர்கள் எல்லை மீறக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காதலர்கள் கூடும் பூங்காக்கள், பொழுது போக்கு தலங்கள், மற்றும் ஆன்மிக பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com