உக்ரைன் நாட்டில் தவிக்கும் மதுரை மாணவர்களின் பெற்றோர் கண்ணீர்

உக்ரைனில் படிக்கும் தங்களின் மகன்களை மீட்டுத்தர வேண்டும் என்று மதுரை மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
மகன் பங்கஜநாபனை மீட்க வலியுறுத்தி அவரது பெற்றோர் சகஜெயேந்திரன்-விஜயலட்சுமி மதுரை கலெக்டரிடம் இன்று மனு கொடுத்த
மகன் பங்கஜநாபனை மீட்க வலியுறுத்தி அவரது பெற்றோர் சகஜெயேந்திரன்-விஜயலட்சுமி மதுரை கலெக்டரிடம் இன்று மனு கொடுத்த
Published on

மதுரை

மகன் பங்கஜநாபனை மீட்க வலியுறுத்தி அவரது பெற்றோர் சகஜெயேந்திரன்&விஜயலட்சுமி மதுரை கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.

மதுரை தெற்குவாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சகஜெயேந்திரன். இவரது  மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பங்கஜநாபன்(வயது 21), உக்ரைனில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர் தற்போது அங்கு நடைபெற்று வரும் போரால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அவரை பத்திரமாக மீட்டு அழைத்து வரவேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் பங்கஜநாபனின் பெற்றோர் இன்று மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:&

எங்களுக்கு ஒரே மகன் பங்கஜநாபன். சிறு வயது முதலே விமானவியல் படிப்புபடிக்க ஆசைப்பட்டதால்  அவரை  உக்ரைனில் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படிக்க வைத்து வருகிறோம். அவருக்கு இது இறுதி ஆண்டு ஆகும்.

இந்த நிலையில் உக்ரைன்&ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் உருவானபோதே நாங்கள் பங்கஜநாபனிடம், “நீ ஊருக்கு கிளம்பி வந்துவிடு” என்று தெரிவித்தோம். ஆனால் அவன் போர் எல்லாம் வராது. எனவே நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளதாக கூறினான். 

இந்த நிலையில் தற்போது போர் தொடங்கி விட்டதால் பங்கஜநாபன் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். கல்லூரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக பங்கஜநாபன் தெரிவித்தான். ஆனாலும் இது எப்போது நடைமுறைக்கு வரும்? என்று தெரியவில்லை.

எனவே பங்கஜநாபன் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகளில் தங்கி வசித்து வருகிறான். அவனிடம் செல்போனில் பேசினோம். அப்போது குண்டுவீச்சில் இருந்து தப்பிப்பதற்காக பதுங்கு குழிகளில் உள்ளோம். எனவே நீங்கள் எப்படியாவது முயற்சி செய்து எங்களை காப்பாற்றுங்கள்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.  அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

உக்ரைன் நாட்டில் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒரே மகனை  காப்பாற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவர் நிச்சயமாக ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.  மத்திய&மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு எங்களின் ஒரே மகனை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மதுரை வில்லா புரம் வைகை வீதி ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த குமார்&லீலா தம்பதி யரின் மகன்  சஜூ குமாரும் உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டி  லீலா இன்று காலை மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தார். 

பின்னர் அவர் கூறியதாவது:

எனது மகன் சஜூ குமார் உக்ரைன் நாட்டில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் கடந்த ஆண்டு தான் அந்த நாட்டுக்கு சென்றார். 

இந்த நிலையில் அங்கு போர் மூண்டதால் அவர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.  ஆனால் அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எனவே சஜூகுமார் உயிருக்கு பயந்து நண்பர் களுடன் பதுங்குகுழியில் தங்கியுள்ளார்.  இன்று காலை அவரை செல்போனில் தொடர்பு கொண்டோம். அப்போது இந்திய தூதரகத்தில் இருந்து பேசியதாகவும், 2 நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்  என்று கூறியதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் அதற்கான வேலைகள் நடக்கிறதா, இல்லையா? என்பது பற்றிய எந்த விவரங்களும் எங்களுக்கு தெரியவில்லை.

உக்ரைன் நாட்டில் ஏ.டி.எம். சேவை துண்டிக்கப்பட்டு விட்டதால் எங்களின் மகன் செலவழிக்க பணமின்றி திண்டாடி வருகிறார்.

எனவே உக்ரைன் நாட்டில் உயிருக்கு போராடும் என் மகனை மத்திய&மாநில அரசுகள் உடனடியாக மீட்டு தர ஆவண செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

உசிலம்பட்டியைச்  சேர்ந்த கபில்நாத்(22),   தீபன் சக்கரவர்த்தி(23) ஆகியோர் உக்ரைனில் உள்ள கியூ, புஷ்குரோத் மாகாணங்களில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகின்றனர். 

கபில்நாத்தின் தந்தை ஆதிசிவன், பெருங்காம நல்லூர் ஊராட்சி செயலாளராக  பணிபுரிந்து வருகிறார். தீபன் சக்கர வர்த்தியின் தந்தை கவுந்தர பாண்டியன், மதுரை மாவட்ட போக்குவரத்து பிரிவு போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார்.

மாணவர்களான இருவரும் போர் தொடங்கு வதற்கு முன்பாகவே,  ஊர் திரும்புவதற்காக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.  ஆனால் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டதால் அவர்கள்  சொந்த ஊர் திரும்ப வழியின்றி உக்ரைனில் தவித்து வருகின்றனர். இது அவர்களின் பெற்றோரை தவிப்பில் ஆழ்த்தியுள்ளது.

கபில்நாத்தின் தந்தை ஆதிசிவன் கூறியதாவது:

கபில்நாத்தை கஷ்டப் பட்டு வளர்த்து உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க வைத்துள்ளோம். அவன் கடைசி ஆண்டு படிப்பை முடித்தவுடன் தமிழகத்தில் வேலை தேடுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தான். இந்த நிலையில் கபில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகிறான். 

அவனிடம் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது அவன், “உக்ரைன் நாட்டில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. எனவே நாங்கள் உயிர் பிழைப்பதற்காக பதுங்கு குழிகளில் தங்கி உள்ளோம். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறுகிறான். எனவே மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு என்னுடைய மகன் நாடு திரும்ப உதவி செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தீபன் சக்கரவர்த்தியின் தந்தை சவுந்தரபாண்டியன் கூறியதாவது:&

உக்ரைன் நாட்டில் போர் நடந்து வருகிறது. இதனால் அங்குள்ளவர்களுக்கு உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. உக்ரைன் நாட்டில் இருதரப்பு மோதல் போக்கு தொடங்கியதுமே தீபன் சக்ரவர்த்தி 3 முறை விமான டிக்கெட் பதிவு செய்து உள்ளான். 

இருந்தபோதிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, அவனால் சொந்த ஊருக்கு திரும்ப இயலவில்லை. உக்ரைன் நாட்டில் தீபன் சக்கரவர்த்தி, கமல்நாத் மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் மத்திய&மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு எங்களின் பிள்ளைகளை காப்பாற்றி தர வேண்டும். 

இவ்வாறு அவர்  கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com