‘மதுரை காவலன்’ செயலி அறிமுகம்

‘மதுரை காவலன்’ செயலி மூலம் கள்ளழகர் எங்கு வருகிறார்? என்பதை அறிந்து கொள்ளலாம்.
‘மதுரை காவலன்’ புதிய செயலி.
‘மதுரை காவலன்’ புதிய செயலி.
Published on

மதுரை

சித்திரை திருவிழாவின் போது பொது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் செயலியில் “டிராக் அழகர்” என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வருகிற 14-ந்தேதி அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை “கள்ளழகர் எந்த இடம் வழித்தடத்தில் உள்ளார்?” என்பதை “டிராக் அழகர்” என்ற லிங்க் மூலம் வரும் வரைபடத்தில் தெரிந்து கொள்ளலாம். இதனால் பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்க முடியும். போக்கு-வரத்து நெரிசலும் தவிர்க்கப்படும்.

கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் ப்ளேஸ்டோர் மூலம் மதுரை காவலன் செயலியை தரவிறக்கம் செய்து அப்டேட் செய்த பிறகு, மதுரைகாவலன் செயலில் உள்ள “டிராக் அழகர்” லிங் மூலம் கள்ளழகர் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம்.

மதுரை காவலன் செயலியை இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். இதன் மூலம்  600 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. பூட்டிய வீடுகள் கண்காணிப்பு வசதி மூலம் இதுவரை 1100 தகவல்கள் பெறப்பட்டு,  ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2ஜி செல்போனிலும் குறுஞ்செய்தி மூலம் கள்ளழகர் வருகையை துல்லியமாக அறியலாம்.

சித்திரைதிருவிழா கள்ளழகர் வருகையை முன்னிட்டு அழகர்கோவில் முதல் மதுரை மாநகர் வரை ஆயிரம் போலீசார் பந்தோ-பஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேற்கண்டதகவலை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com