

மதுரை
மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
மதுரை- & திருப்பரங்குன்றம் இடையே நாளை (4ந்தேதி) மின்வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லாமல் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு செல்லும்.
அதேபோல மதுரையில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 11.25 மணிக்கு புறப்படும் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில், 3 மணி நேரம் காலதாமதமாக, மறுநாள் (5ந் தேதி) அதிகாலை அதிகாலை 2:25 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
-இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.