மதுரையில் ஆயுதங்களுடன் ரவுடி கைது

மதுரையில் ஆயுதங்களுடன் ரவுடி கைது செய்யப்பட்டார்.
மணிகண்டன்
மணிகண்டன்
Published on

மதுரை

மதுரை பாண்டிகோவில் பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். 

இதன்படி மாநகர் வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த  தனிப்படையினர் பாண்டி கோவில் ரிங்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அம்மா திடல் பகுதியில் வாலிபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவது தெரியவந்தது. அவர்  போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். 

ஆனால் போலீசார் அவரை பிடித்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கூலு மணி (வயது 29) என்பது தெரியவந்தது. 

இவர் மீது கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மணிகண்டன் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com