

மதுரை
மதுரை ஆரப்பாளையம் டி.டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினகுமார்.இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 38).
சம்பவத்தன்று காலை பரமேஸ்வரி பூஜை அறையில் விளக்கு ஏற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாக பரவியது.
வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.