ஆவடி அருகே காதல் தகராறில் மோதல்- 3 பேர் கைது

ஆவடி அருகே காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பலத்த காயம் அடைந்த 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கைது
கைது
Published on

சென்னை:

திருமுல்லைவாயலில் காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன், அவரது நண்பர் சுரேந்திரன் ஆகியோரை 7 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து திருவேற்காடை சேர்ந்த சங்கர், அயப்பாக்கம் எரேமியா, அம்பத்தூர் தமிழ்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com