டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

நிலக்கோட்டை அருகே டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
லாரி கவிழ்ந்ததில் சரிந்துகிடக்கும் தென்னை மட்டைகள்
லாரி கவிழ்ந்ததில் சரிந்துகிடக்கும் தென்னை மட்டைகள்
Published on

நிலக்கோட்ைட:

நிலக்கோட்டை அருகே ஏ.ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன்(27). இவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து தென்னை மட்டைகளை வாங்கி கயிறு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வருகிறார். அதன்படி இன்று காலை அணைப்பகுதியிலிருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு விளாம்பட்டி-மட்டப்பாறை சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

இதில் லாரியில் பயணம் செய்த போதுமணி, லட்சுமி, செல்வி, ரமேஷ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர் காசிவிஸ்வநாதன் காயங்கள் இன்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com