பூச்சி மருந்து குடித்து லாரி டிரைவர் சாவு

கனக பசுபதி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.மனமுடைந்து காணப்பட்ட கனக பசுபதி செட்டிகரை ஏரி அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூச்சி மருந்து குடித்து லாரி டிரைவர் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பள்ளக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கனக பசுபதி (வயது 28). லாரி டிரைவர். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று கனக பசுபதி வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனக பசுபதி செட்டிகரை ஏரி அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com