தேனி அருகே லாரி டிரைவர் தற்கொலை

அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மன உலைச்சலுக்கு ஆளான டிரைவர் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே பல்லவ ராயன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 41). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்த்ததால் சரியாக சாப்பி டாமல் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.

அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மன உலைச்சலுக்கு ஆளான அவர் விஷ மருந்தை குடித்து மயங்கினார். அவரது குடும்பத்தினர் உத்தமபாளை யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக டாக்டர்கள் தெரி வித்தனர். இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com