கயத்தாறு அருகே கால்நடை தடுப்பூசி முகாம்

கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.கோமாரி நோய் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 70 -க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமில் கோமாரி நோய் பற்றியும் அந்த நோயின் அறிகுறிகள், நோயின் பராமரிப்பு, தடுக்கும் முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

இதில் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவராஜ், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கோட்ட உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, மருத்துவர்கள் மனோஜ், குமார் பெரியசாமி, தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ வள்ளி செந்தில் வேல், துணைத் தலைவர் முருகன், மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளையும் கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com