காயல்பட்டினத்தில் இலக்கிய மன்ற விழா

காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளியின் ஆட்சி மன்ற குழு தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கியபோது எடுத்த படம்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கியபோது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளியின் ஆட்சி மன்ற குழு தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் முன்னிலை வகித்தார். மாணவர் கங்காதரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்திக், உதவி தலைமை ஆசிரியர் முகமது சித்திக், தமிழ் ஆசிரியர்கள் முகமது இஸ்மாயில், ஷேக் பீர்முகமது காமில், செய்யது ரபீக், சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் அனீஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com