திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே கன்னாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ெஜயா (வயது 47) இவரது கணவர் சிவக்குமார். இந்நிலையில் ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, போலீசார் வருவதை பார்த்து ெஜயா வீட்டிலிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் வீட்டில் மறைத்து வைத்திருந்த 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com