ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது
ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகர் பகுதியில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மதுபானங்கள் அதிக அளவில் பதுக்கி வைக்க ப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் சம்மந்தப் பட்ட வீட்டினை ரகசியமாக கண்கா ணித்தனர்.

அப்போது வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து மதுபானங் களை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் சட்ட விரோதமாக மதுவிற்ற முனிசிபல்காலனி ஜான்சி நகரை சேர்ந்த சதீஸ்குமார் (32), கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com