ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் சாலைமறியல்

குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் சாலைமறியல்
Published on

அருவங்காடு,

நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊட்டி செல்வது வழக்கம்.

ஆனால் இந்த ரோடு தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் வாகனங்கள் பழுது அடைவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் சுதாகர் தலைமையில், குன்னூர் லெவல்கிளாஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட வி.சி.க நிர்வாகிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com