திருப்பத்தூரில் சிறுத்தை நடமாட்டம்- பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை

சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது.காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவிப்பு.
திருப்பத்தூரில் சிறுத்தை நடமாட்டம்- பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை
Published on

திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த நிலையில், அந்நகர பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

சிறுத்தை இருப்பதை கண்டு தப்பிக்க முயன்று கார் பார்க்கிங்கில் உள்ள காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com