தச்சநல்லூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் - மக்கள் கோர்ட்டு நீதிபதி பங்கேற்பு

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து தச்சநல்லூர் அங்கன்வாடி மையத்தில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது.நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் ஆகியவை இணைந்து தச்சநல்லூர் அங்கன்வாடி மையத்தில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து வறுமை ஒழிப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் கருத்துரை வழங்கினார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் மாதவி நன்றி கூறினார். ‌நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com