லாரி மோதி ஆசிரியர் சாவு

பள்ளி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது.
லாரி மோதி ஆசிரியர் சாவு
Published on

திருவோணம்:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் வயது 33. இவர் ஒரத்தநாடு பாப்பநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு மோட்டரர் சைக்கிளில் வீடு திரும்பினார்.

திருவோணம் அருகே ராஜாளி விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.

இது தொடர்பாக திருவோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com